--- --:--:-- --

விஜய் பொதுக் கூட்டம் 18ஆம் தேதிக்கு மாற்றம்..!

2

ரோட்டில் விஜய் தலைமையில் வரும் 16ஆம் தேதி தவெக பொதுக்கூட்டத்தை நடத்த அனுமதி கோரி அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜாதாவிடம் மனு அளித்திருந்தார். கூட்டத்தில் 40 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

 

பின்னர் அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் மாபெரும் எழுச்சி ஏற்படப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர்கள் தேர்வு செய்திருந்த பவளத்தாம்பாளையத்தில் மாவட்ட எஸ்பி மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில், காவல்துறையின் அதீத கட்டுப்பாடுகளால், 16ஆம் தேதிக்கு பதிலாக 18ஆம் தேதி பொதுக் கூட்டம் நடத்த இருக்கிறோம் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

“இதுவரை வழங்காத வகையில் கூடுதல் விதிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த விதிகளை பூர்த்தி செய்து அங்கு அனுமதி பெற வேண்டும் என்றால் கூடுதல் நாட்கள் தேவைப்படுகிறது. எனவே 18ஆம் தேதி அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யிடம் கடிதம் தர இருக்கிறோம். அனுமதி வழங்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்குச் செல்வோம்” என்றார்.

தொடர்ந்து கட்டுப்பாடுகளை குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், “சொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன்.. வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்” எனத் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

Right Menu Icon