விறுவிறுப்படையும் தேர்தல் பரப்புரை..!
தேர்தல் பரப்புரை களைகட்டிய நிலையில் பல்வேறு வேட்பாளர்களும் வாக்குகளை சேகரிக்க கை வந்த திறமைகளை கையாளுகின்றனர். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மலையரசன் மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரித்தார்.
கலையரசன் நாள்தோறும் டீக்கடையில் மாஸ்டராக பணியாற்றியும் மூட்டை தூக்கி காய்கறி விற்பனை செய்தும் பல்வேறு வகையில் வாக்காளர்களிடையே கவனம் பெற்று வருகிறார்.
இதை போல் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் லோகேஷ், தமிழ்ச்செல்வன், எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டு ஜெயலலிதாவின் திருமணம் செய்து வைக்கப்பட்ட தன்னை ஒரு லட்சத்து 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெய பிரகாஷ் உருது பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக கூட்டணி வெற்றி பெற அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.





