--- --:--:-- --

விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் ஒருவர் காரை ஓட்டிச் சென்ற வீடியோ..!

5

தாய்லாந்தில் விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் ஒருவர் காரை ஓட்டிச் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் உள்ள ஸ்வர்ணபூமி விமான நிலையத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

ரன்வேயில் விமானத்திற்கு அருகில் கார் செல்வதை கண்ட விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து காரை ஓட்டிச் சென்ற பிரதீப் என்பவர் உடனடியாக கைது செய்யப்பட்டார் .தவறுதலாக விமான ஓடுபாதையில் சென்று விட்டதாக அந்த அவர் தெரிவித்துள்ளார்.

 

ஆனால் அவரது காரில் போதைப் பொருட்கள் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon