அறுவைசிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சில நாட்கள் ஓய்வு தேவை..!
காலில் ஒரு சிறு அறுவைசிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் காலில் அறுவை சிகிச்சை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே செய்த அறுவை சிகிச்சையின் தொடர்ச்சியாக மற்றொரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது என குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது என்றும் சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் என் பணிகளில் புதிய விசையுடன் தொடர்வேன் எனவும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மக்களை நேரில் சந்திக்க இயலாது என்றாலும் வீடியோ வழியாக பேசுவேன் என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.







