நாட்டை உலுக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு..!
கொல்கத்தா அரசு ஹாஸ்பிட்டலில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
162 நாள்கள் தொடர் விசாரணை நடத்தப்பட்டு, 120 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா செல்டாக் கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி அனீர்பான் தாஸ் இன்று மதியம் தீர்ப்பை வெளியிட உள்ளார்.





