திருப்பூரில் இன்று அரையிறுதி கிரிக்கெட் போட்டிகள்..!
திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் – கோவா, – ஸ்பார்க்கிள் ஸ்டார்ஸ் அசோசியேஷன் அணிகளுக்கு இடையே, முதல் அரையிறுதி போட்டியும், ஐதராபாத் கோச்சிங் பியாண்ட் அணி – கேரளா, ஆர்.எஸ்.சி. எஸ்.ஜி., கிரிக்கெட் கிளப் அணி இடையே இரண்டாவது அரையிறுதி போட்டியும் இன்று நடக்கிறது.
வெற்றி பெறும் அணிகள், கோப்பைக்கான இறுதி போட்டியில் மோதும். தோற்கும் அணிகள், மூன்றாமிடத்துக்கான போட்டியில் பங்கேற்கும்.





