--- --:--:-- --

திருவாடானையில் தியாகிகள் பூங்காவில் நினைவு தூணிற்கு வனவேங்கைகள் கட்சி சார்பில் வீரவணக்கம்

9.3

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தியாகிகள் பூங்காவில் சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவாக நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. இன்று இங்கு வந்த வனவேங்கைகள் கட்சி சார்பில் அதன் நிறுவனர் இரணியன் தலைமையில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் முன்னிலையில் நினைவு தூணிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

 

நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த வீர தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள். அதனை தொடர்ந்து வன வேங்கைகள் கட்சி நிறுவனர் இரணியன் கூறுகையில் பேருந்து நிலையம் அருகில் உள்ள தியாகிகள் இடத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவாக வெண்கல ஸ்தூபி அமைக்க வேண்டும் என்றும், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பல தியாகிகள் நினைவு  துணிற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்.

Leave a Reply

Right Menu Icon