--- --:--:-- --

தி ஃபேமிலி மேன் 2 தொடரை தடை செய்ய வேண்டும் எனக்கூறிய வைகோ..!

1

மிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் தி ஃபேமிலி மேன் 2 தொடரை தடை செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். மதிமுக தலைவர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தி ஃபேமிலி மேன் 2 என்ற ஹிந்தி தொடரை ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி இந்த கடிதம் எழுதி இருக்கின்றேன்.

 

ஹிந்தி மொழியில் வெளியாகும் இந்த தொடரின் முன்னோட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாகவும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஏஜென்ட் உடன் தொடர்பு கொண்டவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் தமிழ் ஈழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈத்த ஈழப் போராளிகளையும் கொச்சைப் படுத்தி இருக்கின்றனர். ராணுவ சீருடை அணிந்த சமந்தா என்ற நடிகை பாகிஸ்தானியர்கள் உடன் தொடர்பு வைத்திருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

 

இத்தகைய காட்சிகளைக் கொண்ட இந்த தொடர் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது என குற்றம் சாட்டியிருந்தார். அமேசான் ஓடிடி தளத்தில் இந்தத் தொடரை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன் என்றும் ஒளிபரப்பை தடை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon