--- --:--:-- --

சக நோயாளிக்கு ஆக்ஸிஜன் படுக்கையை விட்டுக் கொடுத்த செவிலியர் உயிரிழப்பு..!

2

காஞ்சிபுரத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சக நோயாளிக்கு ஆக்சிஜன் படுக்கையை விட்டுக்கொடுத்ததால் செவிலியர் உயிரிழந்த சோகம் நேரிட்டுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த மணி என்பவர் சென்னை மாநகராட்சியில் ஒன்பதாவது மண்டலத்தில் உள்ள துணை பெரு நகர மருத்துவமனையில் நகர சுகாதார செவிலியராக பணியாற்றி வந்தார்.

 

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதிகொரொனா தொற்று ஏற்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 26ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் ஏப்ரல் 28ஆம் தேதி மீண்டும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

80% நுரையீரல் பாதிப்புடன் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு உடல்நிலை தேறியது. அப்போது சக நோயாளிக்கு ஆக்சிஜன் படுக்கையை விட்டுக் கொடுத்துவிட்டு பவானி வீடு திரும்பினார். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி திடீரென உயிரிழந்தார்.

 

இவரது கணவர் கஜேந்திரனும் கடந்த ஆண்டு தாக்கத்தால் உயிரிழந்தார். இருவரின் திருமண நாளான 19ஆம் தேதி பவானியும் உயிரிழந்தார்.

 

Leave a Reply

Right Menu Icon