வாழ்க்கை கொடுத்தவரை அவமானப்படுத்திய வடிவேலு..!
வடிவேலு தமிழ் சினிமாவில் எவ்வளவு முக்கியமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் என்பதாம் நாம் அறிவோம். ஆனால், நாம் திரையில் பார்க்கும் வடிவேலுவிற்கும், தரையில் பார்க்கும் வடிவேலுவும் முற்றிலும் மாறுபட்டவர்கள்.
ஆம், ஏனென்றால் திரையில் எப்படி நகைச்சுவைக்கு சொந்தக்காரராக இருக்கிறாரோ, தரையில் பல சர்ச்சைகளுக்கும், கெட்ட பெயர்களுக்கும் சொந்த சொந்த காரராக மாறி வருகிறார். அவருடன் இணைந்து நடித்த நடிகர்கள் வடிவேலு குறித்து பேசும் அனைத்து விஷயங்களும் மிகவும் மோசமானதாக இருக்கிறது.
அதே போல் தன்னை வாழ்க்கையில் ஏற்றிவிட்ட நபர்களை கூட அவர் அவமதிக்கிறார் என கூறப்படுகிறது. சமீபத்தில் விஜயகாந்த் மரணமடைந்தபோது கூட இறுதி அஞ்சலி செலுத்த வடிவேலு வரவில்லை.
வடிவேலு திரையுலகில் இன்று இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு விஜயகாந்த் ஒரு முக்கிய காரணம் ஆவார். வடிவேலுவின் வளர்ச்சிக்கு விஜயகாந்த் முக்கியமான காரணமாக இருக்கிறாரோ, அதே போல் தான் ராஜ்கிரணும் ஒரு முக்கிய காரணம்.
ஆம், வடிவேலு பட வாய்ப்பு தேடிக்கொண்டு இருக்கும்போது அவருக்கு பட வாய்ப்பு தந்து பிரபலங்களில் ஒருவர் ராஜ்கிரண். ஆனால், தனக்கு வாய்ப்பளித்தவர் என்று கூட பாராமல் அவரை சமீபத்தில் அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டுள்ளார் வடிவேலு.
அண்மையில் கலைஞர் 100 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். விழா மேடை வரும் வழி கார் பார்க்கிங்கில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவு என்பதால், அங்கிருந்து பேட்டரி கார் மூலம் முக்கிய திரையுலகினர் அழைத்து செல்லப்பட்டனர்.





