இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிப்ரவரி மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் தற்போது உள்ள பணிகள் காரணமாக அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாது என கூறியதாக தெரிகிறது. ஒரு மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்காக வரும் நாட்களில் அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் டெல்லி வந்து பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
அமெரிக்க செனட் சபையில் அதிபர் டிரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் மீதான அடுத்தடுத்த நடவடிக்கைகளை வைத்து அவருக்கு இந்தியா வரும் சரியான தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதற்கு முன்னர் அமெரிக்க அதிபராக இருந்த கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பாரக் ஒபாமா ஆகியோருக்குப் பிறகு ட்ரம்ப் இந்தியா வர உள்ளார்.






