--- --:--:-- --

ஊரடங்கில் எந்தெந்த துறைகளுக்கு தளர்வு..! பட்டியல் வெளியிட்டது மத்திய அரசு..!தமிழகத்திலோ தாமதமாகும்?

5

ஊரடங்கு உத்தரவில் ஏப்ரல் 20-ந் தேதி முதல் தளர்வு செய்யப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்தபடி எந்தெந்த துறைகளுக்கு நாளை முதல் அனுமதி என்ற பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசோ, தாம் நியமித்த வல்லுநர் குழுவின் பரிந்துரையே நாளை தான் கிடைக்க உள்ளது. அந்த பரிந்துரையை ஆராய்ந்த பிறகே உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். அதுவரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவித்துள்ளதால், மத்திய அரசின் அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது என்றே தெரிகிறது.

 

இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியல்படி நாளை (20-ந்தேதி) முதல் செயல்பாட்டிற்கு வரும் சேவைகள் இது தான் :

 

வேளாண்மை மற்றும் தோட்டத் தொழில்களுக்கு அனுமதி. தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள், அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிகள் (100 நாள் வேலை) தொடரும். இதில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவ சேவைகள் செயல்படும்.
நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை செயல்படும். பொது வினியோகத்துறை செயல்படும்.

 

மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி. ஆன்லைன் மூலம் கற்பித்தல் மற்றும் தொலைதூர கல்விக்கு அனுமதி.அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யலாம்.
வர்த்தகம், தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.கட்டிட தொழில்களை தொடர அனுமதி.மீன்பிடித் தொழில் தொடர்ந்து இயங்கும்.தனியார் வாகனங்களை மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்காக இயக்கலாம்.அனைத்து மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள் செயல்படும்.

 

இந்த அறிவிப்புகள் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளுக்கு பொருந்தாது எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது எனத் தெரிகிறது. ஏனெனில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், வல்லுநர் குழு நாளை வழங்கும் பரிந்துரைகளை ஆராய்ந்து உரிய ஆணை பிறப்பிக்கப்படும் எனவும் அதுவரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon