பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம்..! மோடியின் துறை என்ன..?
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் இலாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கடந்த 2019ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பதவியேற்ற நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 7 பெண்கள் மற்றும் 8 மருத்துவர் உள்ளிட்ட 41 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இவர்களில் தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் உள்ளிட்ட 36 புதுமுகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட 43 அமைச்சர்களுக்கும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் பலம் 77 ஆக அதிகரித்துள்ளது. இதனிடைய பிரதமர் மோடிக்கு கூடுதல் பொறுப்பாக அறிவியல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவு துறை கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.






