--- --:--:-- --

மத்திய பட்ஜெட் 2020-2021: உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.100 லட்சம் கோடி ஒதுக்கீடு…! நிதியமைச்சர் தகவல்!!

sfa

மத்திய அரசின் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

 

நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை அடுத்த 5 ஆண்டுகளில் மேம்படுத்த 100 லட்சம் கோடி ஒதுக்கப்ப்டும் என்பது உள்பட பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் மற்றும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள் :

 

தேசிய அளவில் ஜவுளி உற்பத்தி தொழில் நுட்ப வசதிகள் தொடங்கப்படும்.

 

2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் 150 புதிய பாடப்பிரிவுகளை உருவாக்க இலக்கு

 

மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கவும் கூடுதலாக மருத்துவர்களை உருவாக்கும் திட்டம்

 

அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 100 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.

 

முதல் 2025 ஆம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலுமாக ஒழிக்க திட்டம்

 

ஏற்றுமதியாளருக்கான மானியம் முழுவதும் ஆன்லைன் மூலம் வழங்கப்படும்.

ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்த பிரீமியத்தில் காப்பீட்டு திட்டம்

 

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் திட்டங்கள் சீரமைக்கப்படும்

 

விரைவில் புதிய கல்விக்கொள்கை கொண்டுவரப்படும்

 

ஜவுளித் துறைக்கு
ரூ.1480 கோடி ஒதுக்கீடு

 

உள்கட்டமைப்பு திட்டங்களில் இளம் பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு

 

நீர் பற்றாக்குறையை போக்க ஜல் ஜீவன் திட்டத்திற்கு ரூ.11 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு

 

பெங்களூருவில் ரூபாய் ஆயிரத்து 600 கோடி செலவில் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும்

 

27 ஆயிரம் கிலோ மீட்டர் தூர ரயில் பாதை மயமாக்கப்படும்

 

27 ஆயிரம் கிலோ மீட்டர் தூர ரயில் பாதை மின் மயமாக்கப்படும் ரயில் பாதைகளை மின்மயமாக்கல் ரூபாய் 26,000 கோடி ஒதுக்கீடு

 

சுற்றுலா தலங்களை இணைக்க கூடுதலாக தேஜஸ் ரயில்கள் இயக்கப்படும்

 

சுகாதாரத்துறைக்கு ரூபாய் 69 ஆயிரம் கோடி

 

தூய்மை இந்தியா திட்டத்துக்கு 12 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு

 

2024-ம் ஆண்டுக்குள் மேலும் 100 புதிய விமான நிலையங்கள் தொடங்கப்படும்.

 

போக்குவரத்து கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூபாய் கு 1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு

 

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு ரூபாய் 25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு என Uல் வேறு திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon