ஜனநாயகன் பட வழக்கு: இயக்குநர் ஹெச்.வினோத் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்
‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் உள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், இயக்குநர் ஹெச்.வினோத், தணிக்கை வாரியத் தலைவர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இப்படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ள காட்சிகள் பாப்பாபட்டி கிராம மக்களின் நற்பெயரையும் கண்ணியத்தையும் பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதாகச் சின்னசாமி என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.






