--- --:--:-- --

அரசுப் பேருந்துகளில் செல்போன் ஸ்பீக்கர் ஒலிக்கக் கூடாது: போக்குவரத்துத் துறை உத்தரவு

6

மிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் இனி கைபேசியில் ஸ்பீக்கர் முறையில் பாடல்கள் அல்லது வீடியோக்கள் கேட்கக் கூடாது எனப் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.கைபேசி ஸ்பீக்கர் மூலம் சத்தமாகச் செய்திகளையோ, பாடல்களையோ ஒலிபரப்புவதால் சக பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படுவதாக வந்த புகார்களை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

 

பேருந்துகளில் ஸ்பீக்கருக்குப் பதிலாக இயர்போன் (Earphone) அல்லது ஹெட்ஃபோனை (Headphone) மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், இது தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்களைப் பேருந்துகளில் ஒட்டுமாறு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon