--- --:--:-- --

கணவனின் சித்திரவதையை தாங்க முடியாமல் பெண் தீக்குளித்து தற்கொலை..!

9

சேலத்தில் கணவனின் சித்திரவதையை தாங்க முடியாமல் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் நாமக்கல்லை சேர்ந்த அரவிந்த் என்பவருக்கும் இடையே கடந்த நான்கு மாதம் திருமணம் நடைபெற்றது.

 

மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியை சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. திருமணமான இரண்டு மாதத்திலேயே குடும்ப தகராறு காரணமாக கணவரை விட்டு பிரிந்து மனோன்மணி பெற்றோர் வீட்டில் தஞ்சமடைந்தார்.

 

இதற்கிடையில் மனோன்மணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். தற்கொலைக்கு முயன்ற பொழுது உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனை பாதிக்கப்பட்டனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி மனோன்மணி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon