வினை தீர்க்கும் விநாயகர் என்னும் தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தங்கநகை தொழிலாளி யூஎம்டி ராஜா !!!
கொரோனோ காலத்தில் பல்வேறு புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு எந்தெந்த விதங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமோ அப்படிப்பட்ட விதங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் கோவை குனியமுத்தூரை சேர்ந்த தங்க நகை தொழிலாளியான யூஎம்டி ராஜா.
இவரின் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதம் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளதால் ஏழை, எளிய மக்கள் இவரின் சிரிய வகையிலான பொம்மைகளை கண்டு தங்களை தாங்களே விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொள்ளும் வண்ணம் அமைந்து விடுகின்றது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் தற்போது வினை தீர்க்கும் விநாயகர் என்ற தலைப்பில் கொரோனா நோய் என்னும் கொடிய நோயை ஒழிக்க வல்லமையானது விநாயகப் பெருமானுக்கு உள்ளது என்பதை குறிக்கும் வகையிலும், வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் விழிப்புணர்வோடு பாதுகாப்பான முறையில் கொண்டாட மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்புகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் கொரோனா உருவ சித்திரத்தை, விநாயகர் பலத்த பாதுகாப்போடு முகக்கவசம் அணிந்து, பாதுகாப்பு உடை அணிந்து, சமூக இடைவெளி விட்டு அதனை அளிக்க முயற்சித்து வருவது போன்ற மெழுகினால் ஆன பொம்மையைச் செய்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார் யு எம் டி ராஜா.
இவரின் இது போன்ற விழிப்புணர்வு பல்வேறு நபர்களை விழிப்புணர்வு அடைய செய்வது என்பது இவரின் திறமைக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிடுகின்றது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது அனைவரையும் வியக்கும் வகையில் இந்த விநாயகர் பொம்மையை கண்டு கொரோனா காலத்தில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்புகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் போன்ற விழிப்புணர்வை கடைபிடிக்கும் வண்ணம் ஏற்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







