வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புக்கான சேர்க்கை தொடக்கம் !!!
கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு வழக்கமாக வேளாண்மை துறை சாந்த படிப்புகளுக்கு பனிரெண்டாம் வகுப்பு முடிவுகள் வெளியானவுடன் சேர்க்கைக்கு மாணவர்கள் வர தொடங்குவர். ஆனால்,இம்முறை பொது ஊரடங்கால் வேளாண் இளநிலைப்படிப்புக்கான சேர்க்கை தள்ளி போனது.
இந்த நிலையில் இணையம் வாயிலாக எவ்வாறு கலை அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை தொடங்கியிருக்கின்றனவோ அதே போல சேர்கையை தொடங்கிவிட்டனர். அதன்படி வேளாண் பல்கலைக்கழக சம்பந்தமான இளநிலை படிப்பில் சேர இணையத்தளம் மூலமாக விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.
அனைத்து வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலகத்துக்கு அழைத்து விவரங்களை சேகரித்துக்கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.







