அரசு பேருந்துகளில் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் பேருந்துக்குள் குடைபிடித்த சம்பவம்..!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அரசு பேருந்துகளில் மழை நீர் ஒழுகி வருகிறது. இதனால் பேருந்துகளில் பயணிகள் குடைபிடித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக வந்தவாசியில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை வந்தவாசியில் இருந்து திண்டிவனம் செல்லும் அரசுப் பேருந்தில் வந்தவாசியில் தொடர்ந்து பெய்த மழையால் பேருந்தின் மேற்கூரையில் இருந்து நீர் கசிந்து ஒழுகி உள்ளது.
இதனால் பேருந்தில் உட்கார்ந்திருக்கும் பயணிகள் பேருந்தின் உள்ளே குடைபிடித்து உட்கார்ந்து செல்லும் அவல நிலை அரசு பேருந்தில் உள்ளது.







