ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை..!
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரில் அமைந்திருக்கும் குல்காம் மாவட்டத்தில் சிங்ஹாம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அவர்களை கைது செய்ய பாதுகாப்பு படையினர் நேற்று அங்கு விரைந்தனர்.
இதனை அறிந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். துப்பாக்கி சண்டை நீடித்து கொண்டே உள்ளது. இந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.






