--- --:--:-- --

கொரொனா ஊரடங்கால் வேலை இழந்த பெண் உட்பட இருவர் தற்கொலை..!

7

சென்னையை அடுத்த ஆவடி அருகே கொரொனா ஊரடங்கால் வேலை இழந்த பெண் உட்பட இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டாபிராம் தேவராஜ புரத்தை சேர்ந்த இளம்பெண் காஞ்சனா அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

 

ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக வேலையில்லாமல் இருந்து வந்த காஞ்சனா குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதேபோல பட்டாபிராம் சத்திரம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் பெயிண்டர் வேலை செய்து வந்தார்.

 

கடந்த ஆறு மாதங்களாக இவர் வேலை இல்லாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பால்ராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Leave a Reply

Right Menu Icon