நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி
சென்னை திருமங்கலத்தில் சாலையில் பஞ்சராகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பிரசாந்த், விஜய், சதீஷ் ஆகிய மூவரும் இன்று அதிகாலை ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
அப்போது சென்னை திருமங்கலம் பாடி மேம்பாலம் மீது டயர் பஞ்சராகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே விஜய் உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த பிரசாந்த் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். படு காயமடைந்த மற்றொரு மாணவர் சதீஷ் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





