--- --:--:-- --

மீண்டும் அரசியலுக்கு வருவாரா சசிகலா? டிடிவி தினகரன் பதில்

TTV 06

தேர்தலுக்கு பிறகு அரசியலுக்கு மீண்டும் வருவது குறித்து சசிகலாதான் முடிவெடுக்க வேண்டும். என்று, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திருவண்ணாமலையில் கூறியதாவது: கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் வரும் 15-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறேன். அன்றே கோவில்பட்டியில் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறேன்.

 

அமைச்சர் கடம்பூர் ராஜுவின் வாகனத்தை சோதனையிட்ட தேர்தல் அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்படுவது அதிகார துஷ்பிரயோகம் ஆகும். அவர்கள் என்ன செய்தாலும், அமமுகவை கோவில்பட்டி மக்கள் வெற்றி பெற செய்வார்கள்.

 

தமிழகத்தில் எம்பி, எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கை விசாரிக்க மத்திய அரசாங்கம் சிறப்பு நீதிமன்றம் அமைத்து இருக்கிறது. எனவே, திமுக என்ன புதியதாக அமைக்கபோகிறார்கள். கோபாலபுரம் கோர்ட்டா என தெரியவில்லை. அமமுக தொடங்கியதன் முதல் நோக்கமே, அதிமுகவை மிட்டெடுக்கதான். இப்போதும் அந்த பணியை தொடர்கிறோம். அதிமுகவில் உள்ளவர்களின் ஊழல் குறித்து மக்களிடம் கொண்டு செல்வோம்.

 

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரைக்குதான் அதிமுக கட்சி இருக்கும். அதன்பிறகு நெல்லிக்காய் மூட்டையை சிதறிவிடும். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் எங்களுடன் இணைவார்கள். அதிமுகவை மீட்டெடுப்போம். தேர்தலுக்கு பிறகு அரசியலுக்கு மீண்டும் வருவது குறித்து சசிகலாதான் முடிவெடுக்க வேண்டும். தேர்தலுக்கு பிறகு மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தப்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon