--- --:--:-- --

கேரளாவில் ஏற்பட்டது சுனாமியா? மக்கள் அச்சம்..!

10

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் மீண்டும் சுனாமி ஏற்பட்டு விட்டதோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உறைந்து போயுள்ளனர். கொச்சியில் உள்ள கடற்கரை கிராமங்களில் உள்ள ஒன்றான செல்லம் என்ற இடத்தில் கடல் அலைகள் திடீரென சீற்றமாக காணப்பட்டது. இதை தொடர்ந்து கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.

 

இதனால் வீடுகளில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு தங்கள் வீட்டு மாடிகளில் ஏறினர். ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி மீண்டும் வந்து விட்டதோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உறைந்து போயினர். ஒக்கி புயல் வந்த போது கூட இது போன்ற பெரிய கடல் அலைகளை தாங்கள் கண்டதில்லை என்று கடற்கரை கிராம மக்கள் கூறுகின்றனர்.

 

கடந்த 15 ஆண்டுகளில் தாங்கள் கண்ட மிகப்பெரிய கடல் அலைகள் இதுதான் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். கேரளாவில் கடும் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் ஆயிரத்து 500 பேர் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி ஏற்பட்ட சுனாமி என்ற ஆழிப்பேரலையால் உலகம் முழுவதும் 2 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon