அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை ஏற்க மறுக்கும் டிரம்ப்..!
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அடுத்த வாரமே தெரியவரும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர் அமெரிக்காவை நாங்கள் சிறப்பாக உருவாக்குவோம் என்றும், பெரிய திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.






