ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைய டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்..!
ஜோ பைடன் தேர்தலில் 8 கோடி வாக்குகள் சரியானது என்று சட்டரீதியாக நிரூபித்த பின்னர்தான் வெள்ளை மாளிகைக்கு அவர் வர முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் வாக்கு எண்ணிக்கையின் போது பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டியிருக்கிறார். பென்சில்வேனியாவில் எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதனிடையே தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து வரும் அதிபர் தேர்தல் மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெற்றதாக கூறிய சைபர் பாதுகாப்பு உயர் அதிகாரியை பணி நீக்கம் செய்துள்ளார்.







