--- --:--:-- --

காயம் அடைந்து ரத்தம் சொட்டிய இளைஞருக்கு உதவிய போக்குவரத்து காவலர்

16

சென்னை சோழிங்கநல்லூரில் ரத்தம் சொட்டிய நிலையில் சாலையோரத்தில் அமர்ந்திருந்த இளைஞரை போக்குவரத்து காவலர் ஒருவர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

சென்னை சோளிங்கநல்லூர் காவல் நிலையம் எதிரே ஆட்டோவில் நண்பர்களுடன் வந்த இளைஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது இளைஞரை கீழே இறங்கும்படி கூறிய ஆட்டோ ஓட்டுனர் இரும்பு குழாயால் தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது.

 

இதில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் சட்டை முழுவதும் ரத்தம் நனைய சாலையோரத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு யாரும் உதவ முன்வராத நிலையில் மனித நேயத்துடன் அணுகிய போக்குவரத்து காவலர் பிரகாஷ் இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.

 

படுகாயமடைந்த ஒருவரை பலரும் கண்டு கொள்ளாமல் கிடந்த நிலையில் போக்குவரத்து காவலரின் உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இளைஞரை தாக்கியவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon