--- --:--:-- --

ரஜினி பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி தீர்த்த ஜப்பான் ரசிகர்கள்!

17

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஜப்பானில் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாளையொட்டி நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக உணவுகளை வழங்கி கொண்டாடினர். ரஜினியின் படங்களை திரையிட்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

 

ஆட்டோ ஓட்டுனராக உடையணிந்த ரஜினிகாந்தின் ரசிகர்கள் கேக் வெட்டி உற்சாகமடைந்தனர். தலைவர் பெஸ்டிவல் என்ற பெயரில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் ரஜினிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon