தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 1,464 பேருக்கு தொற்று உறுதி.. 14 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று 1,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று 1,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 76 ஆயிரத்து 174 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 797 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 53 ஆயிரத்து 332 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 669 ஆக அதிகரித்துள்ளது.






