ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு – சிறையில் உள்ள 4 காவலர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களின் ஜாமின் மனுக்களை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளனர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு தந்தை, மகன் ஜெயராஜ் ஆகியோர் உயிரிழந்தனர்.
சிபிஐ விசாரித்து வரும் இந்த கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவலர்கள் மதுரை மத்திய சிறையில் உள்ளனர்.
அவர்களில் காவலர் முருகன் வெயில் முத்து, தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களில் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவோம் என்றும் தலைமறைவாக மாட்டோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி இளந்திரையன் கைது செய்யப்பட்டவர்களை சட்டவிரோதமாக தாக்கும்போது மனுதாரர்கள் உயர் அதிகாரிகளுக்கு புகார் கொடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். 4 காவலர்களின் மனுக்களையும் தள்ளுபடி செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.






