--- --:--:-- --

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

1

நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பந்தலூர் தாலுகாவில் நேற்று கனமழையும், இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 283 இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

 

50க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வர வைக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தாழ்வான இடங்களில் இருபத்தியாறு அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon