--- --:--:-- --

திருப்பூர்: 15 வேலம்பாளையம் இக்லாஸ் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை மதரஸாவின் 2 ஆம் ஆண்டு நிறைவு விழா..!

9

திருப்பூர் அடுத்துள்ள 15 வேலம்பாளையத்தில் செயல்பட்டு வரும் இக்லாஸ் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை மதரஸாவின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா 15 வேலம்பாளையம் அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது.

 

விழாவிற்கு இக்லாஸ் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை தலைவர் ஹாஜி. ஜெ. அப்துல் சமது தலைமை தாங்கினார். செயலாளர் எம். முஹம்மது ரபீக் வரவேற்றார். அறக்கட்டளை இமாம் எம். முகமது தஸ்லீம் ஸிராஜி கிராஅத் ஓத, மாணவி அல்பியா தாஹிரா இஸ்லாமிய கீதம் படிக்க விழா தொடங்கியது.

 

தொடர்ந்து 15 வேலம்பாளையம் மதரஸா மாணவர்களின் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் பெற்றோர்களை பேணுவோம் என்ற தலைப்பில் மாணவி மர்ஜீனா, பாவமன்னிப்பு கேட்போம் என்ற தலைப்பில் மாணவி சம்சீரா, மரணத்தின் சிந்தனை என்ற தலைப்பில் மாணவி அஜீஜா, இஸ்லாமும் கடனும் என்ற தலைப்பில் மாணவி ரிபா பாத்திமா, ஐந்து கலிமாக்கள் குறித்து ஜூனைத், ரமலானும் குர்ஆனும் என்ற தலைப்பில் முகமது பயாஸ், நோன்பின் சட்டங்கள் மற்றும் தபாரக்கல்லதி மனனம் சூரா குறித்து சுஹைல் அன்சாரி, கலிமா குறித்து முகமது ரஷாத் ஆகியோர் சொற்பொழிவு ஆற்றினார்கள்.

 

தொடர்ந்து மாணவர்களின் ஒருவர் கேள்வி கேட்க மற்றொருவர் பதில் அளிக்கும் வகையில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடந்தது. இதில் நபிமார்கள் சம்பந்தமான என்ற தலைப்பில் நபீஹா – சப்ரின் குழு, இஸ்லாமிய உரையாடல் குறித்து அர்ஷத் – அப்துர் ரஹ்மான் குழு, இஸ்லாம் சம்பந்தமான என்ற தலைப்பில் லசீக்கா – ஜுமானா ஹசீன் குழு, சொர்க்கம் சம்பந்தமான என்ற தலைப்பில் சம்னா – லனீக்கா ஷைன் குழு, குர்ஆன் சம்பந்தமாக என்ற தலைப்பில் நாஜியா – இம்ரான் குழு, மார்க்கம் சம்பந்தமான என்ற தலைப்பில் அப்துல் ரகுமான் – அர்ஷத் குழு, உலகம் குறித்து மர்ஜீனா – முஹம்மது ஸாஜித் குழு, குர்ஆன் சம்பந்தமாக ஆத்திப் அன்ஸாரி – காமில் குழுவினர் கேள்வி கேட்டு பதில் அளித்தனர்.

இதனை தொடர்ந்து மனிதனுக்கு மன நிறைவு தருவது “சொத்தா” அல்லது “சொந்தமா” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. சொந்தம் என்ற தலைப்பில் அஸ்லம், ஆப்ரின் ஆகியோரும், சொத்து என்ற தலைப்பில் அஜீஜா, சம்சீரா ஆகியோரும் பல்வேறு உதாரணங்கள் கூறி பேசினார்கள். முடிவில் நடுவர் பேராசிரியர் ஹஜரத் முஹம்மது இஸ்ஹாக் அல்லாஹ்விடம் ஒரு மனிதன் ஈமானுடன், ஈடுபாட்டுடன் இருந்தால் அவருக்கு சொத்தும் பெரிதல்ல, சொந்தமும் பெரிது அல்ல.

 

இந்த இரண்டும் அவரை தேடி வரும் என்று ஒரு வித்தியாசமான தீர்ப்பளித்தார். இதனைத்தொடர்ந்து பாட்டையப்பன் நகர் மதரஸா மாணவர்களின் இஸ்லாமிய சொற்பொழிவு நடந்தது. அதில் இதழ் இறை புகழ் என்ற தலைப்பில் ஆயிஷா,தஸ்னிம், அரபு எண்கள் குறித்து இஸ்ஹாக், அரபு நாட்கள், மாதங்கள் குறித்து எம். இப்ராஹிம், ஐந்து கலிமாக்கள் குறித்து எஸ் இப்ராஹிம், சுன்னத்தான துஆக்கள் குறித்து எஸ். ரய்யான், சாப்பிடுவதன் சுன்னத்துகள் குறித்து எப்.ரய்யான், ஜூம்மா நாளின் ஒழுக்கங்கள் குறித்து ஆபித், ஹராம், ஹலால் குறித்து கதீஜா, ஸஹாபாக்களின் வரலாறு குறித்து ஷாரிஃபா, சொர்க்கம் நரகம் குறித்து அஸ்மியா, கர்பலா வரலாறு குறித்து அஜீஜா, ஈமான் முஃபஸ்ஸல் குறித்து பாஹிமா, இஸ்லாமிய கேள்விகளை ஆயிஷா கேட்க தஸ்னிம் பதில் அளித்தார்.

 

இதனைத் தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருப்பூர் பெரிய பள்ளிவாசல் அஸ்ஸிராஜுல் முனீர் அரபிக் கல்லூரி பேராசிரியர் முஹம்மது இஸ்ஹாக் பாகவி ஹஜ்ரத் சிறப்புரை ஆற்றினார். பின்னர் பரிசு பெற்ற மாணவிகளுக்கு கேடயம், மெடல் சான்றிதழ்களை வழங்கினார்.

 

அதேபோல் இந்த ஆண்டு மாநில அளவில் நடந்த கலை திருவிழாவில் தமிழ் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த அனுப்பர்பாளையம் புதூர் பள்ளி மாணவி லனீக்கா ஷைன்னுக்கும் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. முடிவில் பொருளாளர் சித்திக் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை துணைத் தலைவர் அப்துல் அஜீஸ், துணை பொருளாளர் அப்துல் கலாம், நிர்வாக குழு உறுப்பினர்கள் ரஜீப் ராஜா, மன்னார் சேட், துருவத் பாஷா, இப்ராஹிம், ராஜா ரஜுபுதீன் உள்பட நிர்வாக குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் இஸ்லாமிய பெண்கள், அப்பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் மதியம் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

Right Menu Icon