வேளாண் சட்டங்களை குப்பைத்தொட்டியில் வீசுங்கள்..!
விவசாயிகள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடக்கும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
அதற்கு வன்முறையை தூண்டி விடுவது போல கருத்து தெரிவிப்பதா என பாரதிய ஜனதா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகள் மீது உள்ளூர் மக்கள் கல் எரிந்து விரட்ட முயன்றதால் அங்கு வன்முறை ஏற்பட்டது.
இதை தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் அவர்களை கலைத்தனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகள் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணாவிட்டால் போராட்டம் மேலும் பரவும் என எச்சரித்துள்ளார்.
விவசாயிகள் எதிர்க்கும் வேளாண் சட்டங்களை குப்பைத்தொட்டியில் வீசினால் மட்டுமே பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் மீது காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்துவது முற்றிலும் தவறான செயல் என்றும் அவர் கண்டித்துள்ளார்.
இதற்கிடையே நாட்டு மக்கள் மீது போர் தொடுப்பது போல வன்முறையை தூண்டிவிடும் வகையில் ராகுல் பேசியிருப்பதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.






