--- --:--:-- --

புதிய ரேஷன் கார்டுக்கு மூன்று லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்..!

4

மிழகத்தில் 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்கப்படும் என அரசு அறிவித்ததை அடுத்து மூன்று லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டு களுக்காக விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

 

இந்த திட்டத்தின் மூலம் 25 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் நிலையில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் கார்டுகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

 

இதுகுறித்து கூறிய உயரதிகாரி தினமும் 15 ஆயிரம் பேர் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கின்றனர் என்றும் அதேபோல் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.

 

தற்போது வரை தமிழகத்தில் மூன்று லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் விண்ணப்பித்துள்ளதாக கூறிய அவர் விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon