பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் ராட்சத விண்கல்..!
விளையாட்டு மைதானம் அளவிலான ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. வரும் 24ஆம் தேதி பூமிக்கு அருகில் வரும் அந்த விண்கல்லால் ஆபத்து உள்ளதா என விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
விண்வெளியில் இதுவரை 10 லட்சம் விண்கல் சுற்றி வருவதை கண்டு பிடித்துள்ளனர். இந்த கற்கள் பெரிய அளவில் பாறாங்கல் அளவிலிருந்து சிறிய மலைக்குன்று அளவுவரை இருக்கின்றன. இந்த கற்கள் அடிக்கடி பூமியைக் கடந்து செல்வது வழக்கம். ஒரு சில கற்கள் எரிந்த நிலையிலும், சில கற்கள் முழுமையாக எரியாமலும்ம் உள்ளன.
இந்த நிலையில் ஒரு விளையாட்டு மைதானம் அளவிற்கு பெரிதாக உள்ள ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டுள்ளது. அந்த விண்கல் வரும் 24ஆம் தேதி பூமிக்கு அருகில் வர உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பூமிக்கு வந்த வகையிலும் ஆபத்து இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சுமார் 59 லட்சத்து 38 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் பூமியை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.






