--- --:--:-- --

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கோவைக்கு இரயில் மூலமாக வந்தடைந்த ஆயிரம் டன் கோதுமை !!!

14

கோவை மண்டலத்திற்குட்பட்ட பல்வேறு நியாய விலை கடைகளில் வினியோகம் செய்யப்படுவதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 1000 டன் கோதுமை இன்று கோவை வந்தடைந்தது.உலகில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து சேவைகளும் முடக்கம் அடைந்துள்ள நிலையில்,பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவில் பயணிகள் ரயில் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.

 

இந்த தருணத்தில் பொதுமக்களின் அத்தியாவசியப் தேவைகளுக்காக மத்திய அரசு சரக்கு ரயில்களை மட்டும் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அத்தியாவசிய பொருட்கள், விவசாய பொருட்கள் இந்த சரக்கு ரயில்கள் மூலமாக அனுப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 1000 டன் கோதுமையானது சரக்கு ரயில் மூலமாக கோவையில் உள்ள வடகோவை இரயில் நிலைய நிறுத்தத்திற்கு வந்தடைந்தது.

அவ்வாறு வந்த 60கிலோ கோதுமை சிப்பங்களை , சுமைதூக்கும் பணியாளர்கள் 65 லாரிகளின் மூலமாக பவர் ஹவுஸ் அருகே உள்ள மத்திய உணவு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த வகை தானியங்கள் அனைத்தும் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளுக்கு விநியோகம் செய்யவும், கொதுமை டெண்டர் கோரும் விற்பனையாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. டெண்டர் கோரும் நாட்கள் மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் மூலம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon