--- --:--:-- --

மத்திய அரசு பணியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்காக நடைபெற்ற தேர்வில் கோவை மாணவர்கள் சாதனை !!!

16

த்திய அரசு பணியில் ஐஏஎஸ், ஐபிஎஸ்,ஐஎஃப்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு கடந்த ஜூலை மாதம் மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் இந்த வருடத்திற்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வை நடத்தியது.இந்த தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில் கோவை கேபிஆர் ஐஏஎஸ் அகாடமியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்ற 24 மாணவ, மாணவிகள் அதிகாரிகளாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, கேபிஆர் அகாடமியின் நிர்வாக இயக்குநர் கேபிடி சிகாமணி, மற்றும் பயிற்சி இயக்குனர் ராஜ்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

2019ம் ஆண்டு சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முக தேர்வுகளுக்கு மாணவ, மாணவிகள் தயாராகும் வகையில் கே பிஆர் அகாடமியில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும்,சிறந்த வல்லுநர்களை கொண்டு மாணாக்கர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நடைபெற்ற இந்த தேர்வில் அகில இந்திய அளவில் கே பிஆர் அகாடமியில் இருந்து தேர்ச்சி பெற்றுள்ள 24 பேர்களில், 16 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகவும், 8 பேர் ஐஎப்எஸ் அதிகாரிகளாகவும், தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து கேபிஆர் அகாடமியின் நிர்வாக இயக்குனர் கேபிடி சிகாமணி இது குறித்து கூறுகையில் சமூகத்தில் திறன் வாய்ந்த, சமூகபொறுப்பு மிக்க அதிகாரிகளை உருவாக்குவதில் கேபிஆர் ஐஏஎஸ் அகாடமியானது கோவையில் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது எனவும், இதுவரைக்கும் 40க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளை உருவாக்கியுள்ளது,இது எங்களது நிறுவனத்திற்கு பெருமையளிக்கும் செயலாக கருதுவதாக தெரிவித்தார்.

 

மேலும், இந்த பயிற்சி வகுப்புகள் குறித்து பயிற்சி ஆசிரியர் ராஜ்குமார் கூறுகையில் கேபிஆர் ஐஏஎஸ் அகாடமியில் 2020 – 2021 ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் துவங்க இருப்பதாகவும், இந்த பயிற்சி மையத்தில் வெளியூர் மாணவ, மாணவிகள் தங்கி பயிற்சி பெறுவதற்கான விடுதி வசதிகளும் தயார் நிலையில் உள்ளது எனவும், பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமின்றி கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இந்த பயிற்சியில் சேரலாம் என தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon