--- --:--:-- --

ஏப்ரலில் ரேஷன் பொருட்கள் பெறாதவர்கள் மே மாதத்தில் வாங்கலாம்!

7

ரேஷன் கடைகளில் ஏப்ரல் மாதத்தில் பொருட்கள் வாங்காமல் விடுபட்டவர்கள் மே மாதத்திலும் வாங்கிக்கொள்ளலாம் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கொரொனா நிவாரணப் பொருள்களை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பயனாளிகளுக்கு வழங்கினார்.

 

அதை தொடர்ந்து மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் வாகனங்களையும் அமைச்சர் தொடக்கிவைத்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தூய்மைப் பணியாளர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தனது மே தின வாழ்த்துக்களை கூறினார்.

 

மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்க நாளையும் நாளை மறுநாளும் டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் நாளொன்றுக்கு 150 பேர் வீதம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார் . ஏப்ரலில் பொருட்கள் வாங்காமல் விடுபட்டவர்கள் இந்த மாதத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon