பிப்ரவரி 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் தியாகராஜ ஆராதனை விழா..!
தஞ்சை மாவட்டம் திருவையாறில் வரும் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் தியாகராஜ ஆராதனை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான கால்கோள் விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தியாக பிரம்ம சபையின் அறங்காவலர் சந்திரசேகர் அதனால் ஆண்டுதோறும் 5 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் இந்த ஆண்டு இரண்டு நாட்கள் மட்டுமே நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
பிப்ரவரி 1ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கும் விழா 2-ம் தேதி நிறைவடைவதாகவும், இரண்டாம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்தின கீர்த்தனை வைபவம் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி இந்த விழாவில் 200 பேர் வரை அனுமதிக்கப்பட இருப்பதாகவும் சந்திரசேகரன் கூறியுள்ளார்.







