திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்க கிரீடம்..!
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தால் ஆன பாண்டியன் கொண்டை கிரீடம் நகை கடை அதிபர் குடும்பத்தால் வழங்கப்பட்டுள்ளது.
தியாகராய நகரை சேர்ந்த நகைக்கடை அதிபரும், சென்னை தங்க வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவருமான ஜெயந்திலால் பார்த்தசாரதி சுவாமிக்கு பாண்டியன் கொண்டை தங்க கிரீடத்தை காணிக்கையாக செலுத்தினார்.
வைரம், மரகதம் உள்ளிட்ட ஒன்பது வகையான கற்கள் அதில் பதிக்கப்பட்டுள்ளன. பாண்டியன் கொண்டை என்பது ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதருக்கு பாண்டிய மன்னன் தனது ஆட்சிக் காலத்தில் செலுத்திய கிரீடமாகும்.






