திருடன் என நினைத்து வட மாநிலத்தவர்களுக்கு தர்ம அடி..!
கோவை மாவட்ட மண்ணூர் அருகே கள்ளிப்பாளையம் என்ற ஊருக்குள் வந்த வட மாநிலத்தை சேர்ந்த நான்கு பேர் திருட வந்ததாக நினைத்த அந்த பகுதி மக்கள் பிடிக்க முயன்றனர். இதனால் மூன்று பேர் தப்பி ஓடிய நிலையில், ஒருவர் மட்டும் பிடிபட்டார்.
அவரை கட்டி வைத்த ஊர் மக்கள் தர்ம அடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி அறிந்து அங்கு சென்ற போலீசார் தாக்கப்பட்ட நபரை மீட்டு அழைத்து சென்ற விசாரணை மேற்கொண்டனர்.





