ரயிலில் ஏற முயன்றால் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகின்றனர்..!
உக்ரைனில் போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்குள்ள இந்திய மாணவர்கள் கடந்து சென்று எல்லையை கடக்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து கிடைக்கும் வழிகள் எல்லாம் சென்று நாட்டை விட்டு வெளியேற இந்திய மாணவர்கள் முயன்று வருகின்றனர்.
ஆனால் அண்டை நாடுகளின் எல்லைகளில் ராணுவமும் காவல் துறையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி தடுப்பதாக இந்திய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.






