கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மேலும் தளர்வு அறிவிப்பு..!
திருமணம், இறப்பு நிகழ்வுகளைத் தவிர அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு நீக்கியுள்ளது. ஆனால் கடந்த சில வாரங்களாக கொரொனா பாதிப்பு மளமளவென சரிந்து வருகிறது.
இதனால் தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகளை அறிவித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாளை முதல் வரும் 31ஆம் நாள் வரை புதிய கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மார்ச் 3ஆம் நாள் முதல் சமுதாயம், கலாச்சாரம், அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 500 பேர் வரை பங்கேற்க அரசு அனுமதியளித்துள்ளது.
இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 250 பேர் வரை பங்கேற்கலாம் எனவும் திருமணம் இறப்பு நிகழ்வுகளை தவிர அனைத்து நடவடிக்கைகளையும் அரசு நீக்கியுள்ளது.






