உருண்டை வெல்லத்திற்கு போதிய விலை இல்லை.. கவலையில் விவசாயிகள்..!
உருண்டை வெல்லத்திற்கு போதிய விலை கிடைக்காததால் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் விவசாயிகள் கவலையில் உள்ளனர். அணைக்கரை பட்டு மீனாட்சிபுரம் போன்ற பகுதிகளில் கரும்பு விவசாயம் பிரதானமாக உள்ளது.
இதனால் இந்த பகுதியில் உருண்டை மண்டை வெல்லம் தயாரிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உள்ளூர் சந்தையில் உருண்டை வெல்லம் வரத்து அதிகரிப்பால் கேரளாவில் அனுப்பப்படும் ஏற்றுமதி குறைந்ததாலும் வெல்லத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
மேலும் 400 ரூபாய் வரை விலை குறைந்திருப்பதால் தங்களுக்கு விலை கட்டுபடியாகவில்லை என்று விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.





