ஸ்கிராப் தொழில் செய்யப்போவதாக கூறி பண மோசடி செய்த நபர்..!
சென்னை அடுத்த தாம்பரத்திற்கு அருகே ஸ்கிராப் தொழில் செய்யப்போவதாக கோடி கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேற்கு தாம்பரத்தை சேர்ந்த காசி மற்றும் முகமது கனி இருவரிடமும் சானா என்பவர் ஒரு கோடி 31 லட்ச ரூபாய் வாங்கினார். ஸ்கிராப் தொழில் செய்ய உள்ளதாகவும் அதில் 15 முதல் 20 சதவீதம் வரை லாபம் பெறுவதாக கூறியதால் இருவரும் பணம் கொடுத்தனர்.
ஆனால் அதன் பிறகு லாபத்தை கொடுக்காமல், அசலையும் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். பணத்தை திருப்பி கேட்ட பொழுது அவர் கொலை மிரட்டல் விடுத்த நிலையில் இருவரும் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சானாவை கைது செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.





