ரூ.2,000 தாள்களை மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு..!
2000 ரூபாய் நோட்டுகளை அக்டோபர் 7ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இன்றுடன் கெடு முடிவடைய இருந்த நிலையில் அக்டோபர் 7ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்தது ரிசர்வ் வங்கி.
இனியும் தவறவிட்ட 2000 ரூபாய் நோட்டுகளை அக்டோபர் ஏழுக்குள் மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டாலும் சட்டரீதியான புழக்கத்தில் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நீட்டிக்கப்பட்ட கெடுவிற்கு பிறகும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள 19 கிளைகளில் ரூபாய் 2000 நோட்டுகளை மாற்றலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






