ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் திருட்டு..!
புதுக்கோட்டை அருகே ஏடிஎம் கார்டை நூதன முறையில் மாற்றி கொடுத்து பணம் திருடிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் முசகம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன்.
இவர் புதுக்கோட்டை பொன்னமராவதி பகுதியில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த பொழுது அங்கிருந்த ஒரு நபர் அவருக்கு பணம் எடுக்க உதவுவது போல நடித்துள்ளார். இதனையடுத்து லட்சுமணன் வங்கி கணக்கில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததோடு இருபதாயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனில் அந்த நபர் வாங்கியுள்ளார்.
இது குறித்து லட்சுமணன் காவல் நிலையத்தில் நடித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பொன்னமராவதி பணியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதை ஏடிஎம் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கான செல்போன் மற்றும் 40 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.





