--- --:--:-- --

பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசும் உடற்கல்வி ஆசிரியர்.. மாணவிகள் மறியல்..!

School girls stand in front of the stock display board during their visit for an education program at the Colombo Stock Market in Colombo

School girls stand in front of the stock display board during their visit for an education program at the Colombo Stock Market in Colombo, Sri Lanka November 24, 2017. REUTERS/Dinuka Liyanawatte - RC1BD8725D00

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உடற்கல்வி ஆசிரியர் ஆபாசமாக பேசுவதாக கோரி பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 3க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அருள் பிரகாசம் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

 

மேலும் மழை நேரங்களில் உடற்கல்வி ஆசிரியர் உடற்பயிற்சி செய்யவும் மைதானத்தில் ஓடவும் வற்புறுத்துவதாகவும் மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் இது பற்றி புகார் அளித்துள்ளனர்.

 

இருப்பினும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் ரங்கசமுத்திரம் ஆண்டிபட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon