--- --:--:-- --

முன்விரோதம் காரணமாக நண்பனை குத்தி கொலை செய்த இளைஞர்..!

2

துரையில் முன்விரோதம் காரணமாக நண்பனை குத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். 21 வயதான இவர் பிளஸ் டூ முடித்துவிட்டு வேலை இல்லாமல் சுற்றி வந்துள்ளார்.

 

இவருடைய நண்பர் பழனிமுருகன். சில வாரங்களுக்கு முன்பாக இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது கேலி கிண்டல் செய்ததால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

 

இதற்கிடையே பன்னீர்செல்வம் நடந்து சென்றபோது திடீரென வழிமறித்த பழனிமுருகன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பன்னீர்செல்வத்தின் வயிற்றில் குத்தியயுள்ளார்.

 

படுகாயமடைந்த நிலையில் மயங்கி விழுந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon